கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும், புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000, ரூ.500 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், போதிய அளவு பணம் சப்ளை செய்யாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 31-ந் தேதிக்குள் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோவை இன்று (25.01.2017) இரவு 7.59 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினோம்.
அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆனால், மத்திய ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி இத்தகவலை தெரிவித்து இருப்பதால், இது உண்மையாக நடப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்றார்.
எனவே, இந்திய மக்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com