நாடு முழுவதும் 68-ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவையொட்டி, சென்னை போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
குடியரசு தின விழாக்களில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யா சாகர் ராவ், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆகவே, தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடி ஏற்றும் வகையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முப்படை சார்பில் குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அணிவகுப்பு மேடையில் இருந்தபடி அணி வகுப்பு மரியாதையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றார். பின்னர் வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு விருதுகளை அவர் வழங்கினார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com