தமிழகத்தில் ஆட்சியமைக்க அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற குழுத்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். 15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியிருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இன்று (16.02.2017) மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.