அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால் மதுசூதனனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்திருந்தார்.
டாக்டர்.வெங்கடேஷ்.
இந்நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் நீக்கப்படுகிறார். வெங்கடேஷ், தினகரன் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கபடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், பா.வளர்மதி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.