தேனி மாவட்டம், போடியில் நடைபெற்ற அதிமுக அலுவலகக் கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என, கூறியுள்ளார்.
மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் கட்சியில் இடம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு எனக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களில், ஒரு பிரிவினர் எதிர்ப்பு அரசியலில் இறங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளதால், ஓபிஎஸ் ஆதரவாளர்களை சமாதானப்படுத்த, சசிகலா தரப்பு தீர்மானித்துள்ளது.
இதை வெளிப்படுத்தும் வகையில், தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, இதே கருத்தை, மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஓ.பி.எஸ். என்ன பதில் சொல்ல போகிறார்?
-ஆர்.அருண்கேசவன்.