ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

pm-governorpm-cm pm-cm1

isha

isha1

தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோதி கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார்.

சிலை திறப்புக்குப் பின்னர் பிரதமர் பேசியதாவது

சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. மகா சிவராத்திரி நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காசி முதல் கோவை வரை சிவபெருமான் நம்மை இணைத்துள்ளார். மொழிகள் பல இருக்கலாம் ஆனால் ஆன்மிகம் ஒன்றுதான், எல்லா மனிதர் இதயத்திலும் ஆன்மிக குடிகொண்டுள்ளது. உணர்வில் இருந்து சிவனுக்கு அழைத்துச் செல்லம் கிரியாயூக்கியாக யோகா இருக்கிறது.

யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமையை உணரமுடியும். யோகாவை உலக நாடுகளுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது. நல்லவற்றுக்காக போராடும் சக்தியை இறைவன் நமக்கு அளித்துள்ளார். எங்கே கடவுள் இருந்தாலும் அதோடு சேர்த்து விலங்கையும் பறவையும் போற்றுவது நமது வழக்கம்.

இயற்கையை போற்றுவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை. எந்த பெயரில் அழைத்தாலும் உண்மை ஒன்றுதான். முன்னோர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை, சகிப்புத்தன்மை நம் ரத்தத்தில் ஊரியவை என்று கூறினார்.

மேலும் பழமை என்பதற்காக கண்மூடித்தனமாக எதிர்ப்பது தவறு. பெண்கள் இயல்பிலேயே தெய்வதன்மை நிறைந்தவர்கள் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள், பெண்களின் தெய்வத்தன்மை நிபந்தனையற்றது, ஆண்களின் தெய்வத்தன்மை நிபந்தனையானது. நாகரிக உலக வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. காரணம்  அமைதியின்மையே.

மது போன்ற போதைகளுக்கு அடிமையாகிறவர்களை கண்டு வருந்துகிறேன். அனைத்து அழுத்தங்களிலும் இருந்து விடுபட ஒரே நிவாரணி யோகா. யோகாதான் நோய்களில் இருந்தும் விடுதலை பெற்றுத்தரும்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாடிவருகிறோம். ஒட்டுமொத்த உலகமும் யோகா தினத்தை கொண்டாடி வருகிறது. உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் வித்தியாசம் உண்டு. யோகா பயிற்சி மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்று கூறினார்

 -எஸ்.சதிஸ்சர்மா.