சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Sonia Rahul with mks Sonia Rahul with mks1

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைஅவரது வீட்டில் திமுக செயல் தலைவரும், தமிழக  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலினும், திமுக எம்.பி.க்களும் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. ராகுல் காந்தியும் இச்சந்திப்பில் பங்கேற்றார். அப்போது தமிழகத்தில் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலை, சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வு குறித்து சோனியாவுக்கு, மு.க.ஸ்டாலின் விளக்கினார்.

காங்கிரஸ் – திமுக மேலிடத் தலைவர்களின் சந்திப்பை முன்னிட்டு தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோரை தில்லிக்கு கட்சி மேலிடம் அழைத்திருந்தது. இதையடுத்து, இருவரும் சோனியா வீட்டுக்கு திமுக தலைவர்கள் வந்த போது உடனிருந்தனர்.

-எஸ்.சதிஸ்சர்மா.