மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம்!

ops

மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என மு.. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, முன்னாள் முதல்வர் . பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

mks

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டமானது. ஜெயலலிதாவை தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாது. விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண்டும். மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அகற்றும் நிலை உருவானால் ஜெயலலிதா படத்தை தொண்டர்கள் வைப்பார்கள்.

TTV_dinakaran

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய ஸ்டாலின் தனது பேச்சை திரும்பப் பெறுவதோடு, அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும் கொண்டவர் மு.க. ஸ்டாலின். துண்டுச் சீட்டு துணையுடன் பேசும் ஸ்டாலின், ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

வாரிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் உள்ளத்தில் ஈடு இல்லாத புகழுடன் இருப்பவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதா? என்றும் தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 -ஆர்.அருண்கேசவன்.