மத்தியப் பிரதேச மாநிலம், தாமோவில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் நாராயணன் என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். ஆனால், அவர் எடுத்த இரண்டு 500 ரூபாய் புதிய நோட்டுகளிலும் சீரியல் எண் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.
அவரைத் தொடர்ந்து சஞ்சய் எனும் மற்றொரு நபரும் அதே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தார். ஆனால், அவருடைய 500 ரூபாய் நோட்டுகளிலும் சீரியல் எண் இடம்பெறவில்லை.
உடனே, இதுகுறித்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீசார் சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.முக்கு சீல் வைத்தனர்.
இதனிடையே சஞ்சய் என்பவர் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகளை அருகிலுள்ள வங்கிக்குச் சென்று வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
-எஸ்.சதிஸ்சர்மா.