நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக, நடிகர் லாரன்ஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை அறப்போராட்டம்.

LAWRANCE

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்.

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக 02-03-2017 அன்று காலை முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் உண்ணாநிலை அறப்போராட்டத்தை துவங்க இருக்கிறோம்.

எனக்கும் இத்திட்டத்தை குறித்து தெளிவாக தெரியாது. இத்திட்டத்தினால் வரும் பாதிப்பு பற்றி சில பதிவுகளையும், காட்சிகளையும் மாணவர்கள், இளைஞர்கள் காண்பித்தார்கள். அதனை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இந்த அறப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் ஒரு வாரம் முன் அனுமதி வேண்டியிருந்தோம். அவர்கள் நாளை (02-03-2017)  அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

எனவே, நாங்கள் தொடர இருக்கும் இந்த அறப்போராட்டத்திற்கு நீங்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் நலனுக்காக குரல்கொடுக்க அன்போடு அழைக்கிறோம்.

இத்திட்டத்தை குறித்து தெளிவுபடுத்திய எம்மாணவர் இளைஞர்களுக்கு நன்றி. இவ்வாறு நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.