மாற்றுத்திறனாளிகளிடம் மாட்டிக் கொண்ட நடிகர் ராதா ரவி!– வீடியோ.

RADHA RAVI

திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசுகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை மாற்றுத் திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

ஆனால், அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மனம் புண்படும் படி அவர் பேசியுள்ளதாகவும், அவரின் பேச்சு மனித தன்மையற்றச் செயல் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘மாற்றுத் திறனாளிகளை இகழ்ச்சியாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும். தலைவர் கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தேனாம்பேட்டையில் உள்ள ராதாரவி வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ராதாரவி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

-எஸ்.திவ்யா.