ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்! – இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் உண்மை நகல்.

ECIC_Users_UTL_Desktop_Byepn_90320171 C_Users_UTL_Desktop_Byepn_90320172 C_Users_UTL_Desktop_Byepn_90320173 C_Users_UTL_Desktop_Byepn_90320174

மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான முறையான தேர்தல் அறிவிப்பு மார்ச் 16-ஆம் தேதி அன்று வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மார்ச் 23-ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாகும். மறுநாளான மார்ச் 24 அன்று வேட்பு மனுக்களை பரிசீலனை நடைபெறும்.

மார்ச் 27-ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com