நடைபெற்ற உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் 688 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக பிரபல தமிழ் நாளிதழ் “தினமலர்” உள்பட பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது தவறான தகவலாகும்.
ஏனென்றால், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், 2012, மே 5-ந்தேதி முதல் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். அதனால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இதோ அதற்கான ஆதாரம்:
ஆனால், முபாரக்பூர் தொகுதியில் தோல்வியுற்றதாக சொல்லப்படும் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் ஆவார். அகிலேஷ் யாதவ் 70,017 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஷா ஆலம் 70, 705 பெற்று வெற்றி பெற்றார்.
இதோ அதற்கான ஆதாரம்: