முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு, அதிமுக கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து தனியாகப் பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் அணியில் இப்போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்ததன் மூலம், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இடம்பெற்றிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலுள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்த அவர், தனது ஆதரவை நேரில் தெரிவித்தார்.
-ஆர்.அருண்கேசவன்.