ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும்? வேட்பாளர் நேர்காணலில் திமுக தலைமை கேள்வி! -1977 முதல் 2016 வரை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள் முழுவிபரம்.

dmk news1dmk news.2 dmk news dmk news3

ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நேர்காணல் செய்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 5 மகளிர் உள்பட 17 பேர் விருப்பமனு கொடுத்திருந்தனர்.

நேர்காணலில் பங்கேற்றோரிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ன ஜாதி? திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? ஆகிய மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகரில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துசோழன் போட்டியிட்டார். ஜெ.ஜெயலலிதாவிடம் 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் சிம்லா முத்துசோழன் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1977 முதல் 2016 வரை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள் முழுவிபரம்:

R.K. NAGAR.2016 R.K. NAGAR

  -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com