டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

tn.formersகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.

அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

-எஸ்.சதிஸ்சர்மா.