கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன்.

கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ல் 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கறிஞர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 வழக்கறிஞர் அய்யாக்கண்ணு.

வழக்கறிஞர் அய்யாக்கண்ணு.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறு,குறு என பாகுபாடு காட்டாமல், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதிகள் முரளிதரன், நாகமுத்து ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் 4 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com