கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பான் கடற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பலில், இலங்கை கடற்படைக்கு பயிற்சி!-வீடியோ மற்றும் படங்கள்.

japan -srilanka navyjapan -srilanka navy1japan -srilanka navy2japan -srilanka navy5japan -srilanka navy6japan -srilanka navy4

ஜப்பானின் “டெரசுக்கி” கப்பல் ஏப்ரல் 01-ம் தேதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. நட்புறவுகள், விநியோகம் மற்றும் பயிற்சி தேவைகளுக்காக ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான 06 கப்பல்கள் இலங்கை வந்துள்ளது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான “சமுதுர” கப்பல், ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான “டெரசுக்கி” கப்பலுடன் இணைந்து, கப்பல்கள் கையாளுதல், அதன்பின் “டெரசுக்கி” கப்பலில் ஹெலிகாப்டர் பயன்படுத்தி தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இரு நாடு படை அதிகாரிகளின் பங்களிப்பு இந்த பயிற்சிகளுக்கு உதவியது.

-என்.வசந்த ராகவன்.