ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் எதிரொலியாக, 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 22 அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் இரு வாரங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர் இரு தினங்களுக்கு முன் 4 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மேலும் 22 காவல்துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com