தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

vijaya basker house in greeen wayas road chennaiVBR

vijaya-baskar-

தமிழகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு, கல்லூரி, கல்குவாரி மற்றும் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதி, எம்.ஜி,ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீடு, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு, நடிகர் சரத்குமார் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்கள் காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

-கே.பி.சுகுமார்.