சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் அதிமுக (புரட்சிதலைவி அம்மா) அணியின் மதுசூதனுக்கும், அதிமுக பெயரை பயன்படுத்திய புகாரில் அதிமுக(அம்மா) அணியின் டி.டி.வி.தினகரனுக்கும் இன்று (07.04.2017) இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் 08.04.2017 மாலை 4 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரன் ஏற்கனவே அளித்த விளக்கம் திருப்தி இல்லாததால் மீண்டும் விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போகிறப்போக்கைப் பார்த்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்குமா? என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com