வங்காளதேச அதிபர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு இந்தியாவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் ஷேக் ஹசினாவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட ஷேக் ஹசினா, டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். காந்தி சமாதியின் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா-பிரதமர் நரேந்திர மோதி இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதில் வங்காளதேசம் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ. 4.5 பில்லியன் டாலர் தொகையை கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது இதுதான் முதல் முறையாகும்.
புதுடெல்லியில் நடந்த வீடியோ கான்பரன்சிங் வழியேயான நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வங்காளதேச அதிபர் ஷேக் ஹசினா, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியையும் இன்று சந்தித்து பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.