திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். விசைத்தறி உரிமையாளர் சிவகணேசன் என்பவரது மண்டை உடைந்தது. ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் துரத்தித் சென்று கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com