வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி ஒன்றியம், குட்டியம் ஊராட்சி ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் ஊரக கட்டிடம் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் 2012 -ம் ஆண்டு ரூ 2.56.000-க்கு சீரமைக்கப்பட்டது.
ஆனால், இவ்வளவு தொகையை செலவு செய்த அரசாங்கம் தண்ணீர் வசதியினை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் கிராம பொதுமக்கள் இதை பயன்படுத்தாத சூழல் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா?
-ச.ரஜினிகாந்த்.