இலங்கை, வடக்கு மாகாணம், வவுனியாவில் வீசிய சூறாவளி காற்றினால் பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்தது. இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் இராணுவத்தினர் மற்றும் போலிசாருடன் இணைந்து உள்ளுர் இளைஞர்களும் ஈடுபட்டனர்.
மேலும், வவுனியா, ஈரப்பெரியகுளம், களுகுன்னம்மடுவ மற்றும் அலுத்கம பிரதேசங்களில் 28 வீடுகள் சேதமடைந்து உள்ளன.
-வினித்.