சென்னையில் தி.மு.க. சார்பில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த அனைத்து கட்சி தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உடனே உருவாக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களைத் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.
காவிரி டெல்டா பகுதிகளை, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தின் உரிமைகளை அபகரிக்கும் விதமாக அண்டை மாநிலங்கள் தடுப்பணைகள் கட்டுவதைத் தடை செய்திட வேண்டும்.
மீத்தேன் திட்டமும், ஹைட்ரோ கார்பன் திட்டமும் கைவிடப்பட வேண்டும்.
நெல்லுக்கும் கரும்புக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் அடிப்படை ஆதார விலையை கட்டுபடியாகும் வகையில் உரிய முறையில் நிர்ணயிக்க வேண்டும்.
கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்திட உடனே நடவடிக்கை வேண்டும்.
சட்டப்பேரவைச் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டிட வேண்டும்.
குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முழு மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
“நீட் தேர்விலிருந்து” தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு அதிமுக அரசு உடனடியாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடும் வறட்சி நிலவும் இந்நேரத்தில் ரேசன் கடைகளில் பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும்.
தேசிய பேரிடர் மாநிலமாக அறிவித்திட வேண்டும்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25.04.2017 அன்று மாநிலம் தழுவிய “முழு அடைப்புப் போராட்டம்” நடத்துவது.
அது குறித்து விளக்க அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக் கூட்டம் 22.04.2017 அன்று நடத்துவது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-கே.பி.சுகுமார்.