இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி பேரம்; இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவ் கைது! -டி.டி.வி. தினகரன் மீது டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு.

இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவ்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவ்.

டெல்லி போலீசாருக்கு 16.04.2017 இரவு உளவுத்துறையினர் ஒரு தகவலை தெரிவித்தனர். அதில் ஒரு ஓட்டலில் மர்ம நபர் ஒருவர் தங்கியிருப்பதாக கூறினர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்தின் பேரில் சுகேஷ் சந்திர சேகரராவ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த அவரிடம் ரொக்கமாக ரூ.30 லட்சம் இருந்தது. அந்த பணம் பற்றி கேட்டபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது புத்தம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின. அதில் ரூ.1 கோடி இருந்தது. அந்த பணத்துக்கும் அவரால் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை.

போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி .தி.மு.துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்திருப்பதாக கூறினார். இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அப்போதுதான் அவர் இடைத்தரகர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. .தி.மு.. அம்மா அணியினரிடம் தனக்கு தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தெரியும் என்றும் இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றும் கூறி அவர் கோடிக்கணக்கில் பணம் பெற்று வந்திருப்பதாக தெரிய வந்தது.

டி.டி.வி.தினகரன்.

டி.டி.வி.தினகரன்.

போலீசாரிடம் அவர் .தி.மு.. துணை பொதுச்செயலாளர் தினகரன் பெயரை குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.1.30 கோடியை டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள். அவருக்கு சொந்தமான ஒரு பி.எம்.டபிள்யூ மற்றும் மெர்ஸ்சிடஸ் பென்ஸ் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிறகு அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற முறைகேடாக குறுக்கு வழியில் பேரம் பேசியது தொடர்பாக டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் .தி.மு.. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்பட சிலரது பெயர் இடம் பெற்றுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இரட்டை இலை சின்னத்திற்காக ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதா? என்பது பற்றி தினகரனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தினகரனுக்கு சம்மன் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆக தினகரன் டெல்லி செல்ல வேண்டியது இருக்கும்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற கோடிக்கணக்கில் பேரம் நடந்திருப்பதை டெல்லி போலீசார் அறிக்கையாக தயாரித்துள்ளனர். அந்த அறிக்கை தலைமை தேர்தல் கமிஷன் மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க சசிகலா அணியினர் முயற்சி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.