சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் வசிப்போரின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செங்காங் பொது மற்றும் சமூக மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் மொத்தம் 1,400 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொது மருத்துவமனைக்கு 1,000 படுக்கைகளும், சமூக மருத்துவமனைக்கு 400 படுக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை 2018-ம் ஆண்டு தனது சேவையைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-என்.வசந்த ராகவன்.