சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர் ஓத்மான் வோக் உடல், உயரிய அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர்களில் ஒருவரும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஓத்மான் வோக் 17.04.2017 அன்று காலமானார்.
அவரது நல்லுடல் சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் உயரிய அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக பிரதமர் லீ சியென் லூங், அமைச்சர்கள் முன்னிலையில் நல்லுடல் பேழைக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
அதன் பிறகு ஓத்மானின் உடல் தாங்கிய பேழை, சுல்தான் பள்ளிவாசலில் இருந்து, பீரங்கி வாகனத்தில் சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உயரிய அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-என்.வசந்த ராகவன்.