கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் கோல்மால்; பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு!- வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்!

SGF sree-gokulam-chit-finance-co-pvt-ltd-k-h-road-bangalore

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், ‘கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ்நிறுவனத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில்,வருமான வரித் துறை அதிகாரிகள் 19.04.2017 அன்று இந்நிறுவனத்துக்கு சொந்தமான 79 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் A.M. கோபாலன்.

கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் A.M. கோபாலன்.

யார் இந்த கோகுலம் கோபாலன்? 

கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், அகில இந்திய மலையாளிகள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட துறையினருக்கும், முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் மிக நெருக்கமானவருமான “கோகுலம் கோபாலன்” என்று அனைவராலும் அழைக்கப்படும் A.M. கோபாலன், கேரள அரசியலிலும், தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத நபர். லஞ்சம், ஊழல், நிதி முறைக்கேடுகளுக்கு பஞ்சமில்லாத மனிதர்.

அரசியல்வாதிகளின் சட்ட விரோத பணப்பரிமாற்றத்திற்கு இவர் உடந்தையாக இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தாலும், அது உண்மைதான் என்பது தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com