தமிழகத்திலுள்ள அரசு வாகனங்களில் உள்ள வண்ண சுழல் விளக்குகளை அகற்றுவதற்கு முன்னோடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி தனது முதலமைச்சர் அரசு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு வண்ண சுழல் விளக்கினை இன்று (20.04.2017) தலைமைச் செயலகத்தில் அவரே அகற்றினார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.
இதைப் பின்பற்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வண்ண சுழல் விளக்குகள் உடனடியாக அகற்றப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி தெரிவித்தார்.
-ஆர்.அருண்கேசவன்.