இலங்கை புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி குடாயிரிப்பு பகுதியில் 6.265 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் இலங்கை வடக்கு கடற்படை கட்டளை வீரர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கைது செய்யபட்ட நபர் மற்றும் கஞ்சா ஆகியன சட்ட நடவடிக்கைக்காக மரதன்கேனி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு பெருமளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதால், இதை “கேரள கஞ்சா” என்றே இங்கு உள்ளவர்கள் அழைக்கின்றனர்.
-வினித்.