மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் இரவு பணியில் இருந்த 2 காவலாளிகள் மீது இன்று அதிகாலை கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ஓம் பகதூர் (வயது 51) என்ற காவலாளி மரணம் அடைந்தார். கிருஷ்ண பஹதூர் என்ற மற்றொரு காவலாளி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கொடநாடு எஸ்டேட்டின் 10 வது நுழைவாயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ண பஹதூர் காவல்துறையிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் முதல் இன்று நடந்த காவலாளி கொலை வரை அ.இ.அ.தி.மு.க.வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் மர்மமாகவே இருக்கிறது.
-கே.வசந்த்.