இலங்கை திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்! -இலங்கை அரசியலில் பதட்டம்.

tricoonamalai port tricoonamalai

trincomalee-oil-tanks

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து, இலங்கை அரசியலில் ஒரு வகையான பதட்டம் உருவாகியுள்ளது.

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவையும், இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு, 2,600 ஆண்டுகள் இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்த விதம், இலங்கை சுதந்திரத்திற்காக சண்டையிட்ட விதம் குறித்து மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது என, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

மேலும், சர்வதேச வெசாக் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி வருகின்றார் என்றதும் வெசாக் தோரணங்களை காண அவர் வருகிறார் என பலர் நினைத்தனர். எனினும் உண்மையில் அவர் அதற்காக வரவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் தான சாலையில் சாப்பிட்டு விட்டு, இந்தியாவுக்கும் உணவை எடுத்துச் செல்லவே அவர் வருகிறார்.

இந்த தானம் சோறோ, ஜஸ்கிரீமோ, காப்பியோ அல்ல. அது திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கியும் எட்கா உடன்படிக்கை என்பதாகும்.

திருகோணமலை என்பது உலகில் உள்ள 10 இயற்கை துறைமுகங்களில் ஒன்று என்பதுடன் ஆசியாவில் முக்கியமான இயற்கை துறைமுகம். இந்த துறைமுகத்தை கைப்பற்ற வரலாற்று காலம் தொட்டு, இந்தியா, போர்சிக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் போரிட்டுள்ளன.

பிரித்தானிய 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போதிலும், திருகோணமலை துறைமுகத்தை அவர்கள் வைத்துக்கொண்டனர். 1957 ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்கவே அந்த துறைமுகத்தை இலங்கைக்கு திரும்ப பெற்றுக்கொடுத்தார்.

திருகோணமலை துறைமுகத்தை உலக வல்லரசாக உருவாக கனவு காணும் இந்தியாவுக்கு வழங்குவது என்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பது போன்றது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில், திருகோணமலை எண்ணெய் கிணறுகளை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை எனவும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் அங்கு தொடர்ந்து எதிரொளித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

-என்.வசந்த ராகவன்.