குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 23.04.2017 அன்று சிங்கப்பூர் வடகிழக்கு பிராந்தியத்தில் அங் மோ கியோ (Ang Mo Kio) வில் நடைபெற்றது.
இதில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.
மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
இதில் குழந்தைகளோடு குழந்தையாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கேளிக்கை நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு குழந்தைகளை மகிழ்வித்தார்.
இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
-ப.மகேந்திரன்.