தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும் வலியுறுத்தி திமுக தலைமையின் அழைப்பின் பேரில் மாநிலம் அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்பினரும், விவசாயிகள் சங்கத்தினரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒன்றிணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் நடந்த மறியல் போராட்டத்தில் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சியினரும், திமுக பிரமுகர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர். தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
-கே.பி.சுகுமார்.