திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் குடிநீர் கேட்டு அதிகாரியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் செங்கம்–திருவண்ணாலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒன்று திரண்டனர்.
தகவலறிந்த செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டுமென அதிகாரிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உடனடியாக கைபம்புகள் அமைத்து இருதினங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார்.
அதன்பின் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டம் ஏற்பட்டது.
– செங்கம் சரவணக்குமார்.