டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் நீர், சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகள், குருத்வாரா தேர்தல் ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்து வந்த கபில் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2.5 கோடி லஞ்சம் பெற்றார். என் கண் எதிரில் தான் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் லஞ்ச பணத்தை கொடுத்தார் என பதவி இழந்த கபில் மிஸ்ரா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெறும் லஞ்சம், ஊழல்களை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வோம் என்று சொல்லி “வெலக்கமாரு” சின்னத்தில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், சக அமைச்சரிடமே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2.5 கோடி லஞ்சம் பெற்றார் என்று அவரது அமைச்சரவையில் பதவி வகித்த ஒரு அமைச்சரே பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது மல்லாந்து படுத்து கொண்டு எச்சில் துப்பியதற்கு சமம்.
இதற்கு பிறகும் தான் நேர்மையானவர் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபிக்கப்போகிறாரா? (அல்லது) “ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை” என்று மௌனமாக இருக்கப்போகிறாரா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com