திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்கா, விண்ணவாடி கிராமத்தில், மின் கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. காற்றடித்தால் எந்த நேரத்திலும் கீழே சாய்ந்து விடும் அபாயம் உள்ளது.
இதுக்குறித்து செய்யாரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகதில் கிராம மக்களின் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போர் கால அடிப்படையில் மின் கம்பத்தை மாற்றவில்லை என்றால், மிகப்பெரிய மின் விபத்தை சந்திக்க வேண்டிருக்கும். சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-ச.ரஜினிகாந்த்.