காங்கிரஸ் அமைப்புத் தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி கே.பாபிராஜூ, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசரை சந்தித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-கே.பி.சுகுமார்.