திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, சூசைநகர், பத்தியாவரம் கிராமத்தில் புனித வளனார் மெட்டிரிக்குலேஷன் பள்ளியில் 16.05.2017 மாலை 7 மணி அளவில், திரு இருதய சகோதரிகள் சபையின் சார்பில் நிரந்தர வார்த்தைப்பாடு மற்றும் வெள்ளி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர். அருட்தந்தை சௌந்தரராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருப்பலி ஆற்றினார். இத்திருப்பலியில் 200 மேற்பட்ட அருட்சகோதரிகள் பங்கேற்றனர்.
-ச ரஜினிகாந்த்.