2009-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் கொடூரத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் பூமியில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்விற்கு இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமை தாங்கினார்.
இலங்கை முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் அஞ்சலியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
-வினித்.