முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????RG2

RG3RG4RG6RG7 RG8 RG9

தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது 26-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

Raju gandhi

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய மந்திரி .சிதம்பரம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.. அருள் அன்பரசு. மாவட்ட தலைவர் சிவராமன், முன்னாள் நகர தலைவர் அருள்ராஜ், நிர்வாகி அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவியும் மலர்  வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராஜீவ் காந்தி நினைவு இடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட நினைவு இடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இளநீர், தர்பூசணி, பழ வகைகள், தோசை, குளிர்பானங்கள் படைக்கப்பட்டு இருந்தன.

-ஆர்.மார்ஷல்.

-எஸ்.திவ்யா.