இலங்கையில் முகாமிட்டிருக்கும் கனடிய கடற்படை கப்பல்!

canada canada1 canada2 canada3

கனடிய கடற்படைக்கு சொந்தமானவினிபெக் என்ற கப்பல், 5 –நாள் பயணமாக 20.05.2017 அன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

இம்மாதம் 25-ம் தேதி வரை இக்கப்பல் இங்கு  நிலைக்கொண்டிருக்கும். இங்கு தங்கிருக்கும் காலத்தில் கனடிய கடற்படை வீரர்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கப்பல் பயிற்சிகள், சிநேகபூர்வமான சந்திப்புகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.