கடந்த ஆண்டு 57 போர் கப்பல்களும், இந்த ஆண்டு இதுவரை 20 போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.
அந்த வகையில், இந்திய கடற்படையின் உயர் தொழில் நுட்ப ஆழ்கடல் பகுதி ரோந்து கப்பலான “சுமேதா” 20.05.2017 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
இம்மாதம் 24-ம் தேதி வரை இலங்கை கடற்படையினருடன் இணைந்து கப்பல் பயிற்சிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பல விளையாட்டு போட்டிகளில் இந்திய கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.
இக்கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட, சிரேஷ்ட அதிகாரிகள் மேற்குக் கடற்படை கட்டளை தளபதிவுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.