குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைப்பெற்ற ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் (AFDB) வருடாந்தர துவக்க விழா கூட்டத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஆப்ரிக்காவுடனான நமது உறவு வலுப்பெற்று வருகிறது. பிரதமராக, கடந்த 2014-ல் நான் பதவியேற்ற பின்னர், இந்தியா வெளியுறவு கொள்கையில் ஆப்ரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கூட்டுறவு அடிப்படையில் தான் இந்தியா, ஆப்ரிக்கா உறவு அமைந்துள்ளது. இது ஆப்ரிக்க நாடுகளுக்கு தேவையானது. கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் ஆப்ரிக்காவுடன் உள்ள உறவால், இந்தியா பெருமைப்படுகிறது.
ஆப்ரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகம் கடந்த 15 ஆண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டில் மட்டும் வர்த்தகம் இரண்டு மடங்காக 72 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு பிரதமர் நரேந்திரமோதி பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.