திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, கொளக்கரவாடி கிராமத்தில் 24.05.2017 அன்று புனித சகாய அன்னையின் புதிய ஆலயம் அர்ச்சிப்பு திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சலேலசிய சபை அருட்பணி.சுந்தர்தாஸ் மற்றும் பேரருட்திரு. குழந்தையேசு திருப்பலி ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கொளக்கரவாடி கிராம பங்குத்தந்தை அருட்பணி. A. மோட்சநாதன் அருட்சகோதரிகள், வேதியர் மற்றும் சின்னதுரை, சகோதரிகள் ரூபா (ரேகா), அமிர்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் அமலராக்கினி பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற குழந்தைகளான K.பிரவின்குமார் மற்றும் K.பிரதீப்குமார் தலைமையில் கலைநிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைப்பெற்றது.
– மு.ராமராஜ்.