இலங்கையில் பெய்த கனமழையின் காரணமாகவும், சீரற்ற கால நிலையாலும், இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தில் நேற்று (26.05.2017) இரவு புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆறுதல் கூறியுள்ளார். இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி உத்தரவின் பேரில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் உணவு, உடை, மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 2 இந்திய கப்பல் இலங்கை நோக்கி விரைந்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com