இலங்கை வடக்கு கடற்படை கட்டளைச் செயலகத்துடன் இணைந்த கடலோர காவல்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, தொண்டமானாரி பருத்தித்துறை பகுதியில், கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 56.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்மந்தமாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், வடக்கு கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 5.5 கிலோ ஹெராயின் பவுடரை பறிமுதல் செய்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.