கல்வி கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக கூறி, தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

b1b2 b3

அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக கூறி, தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளதுஇங்கு தனியார் பள்ளிக்களுக்கான அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட அதற்கு மேல் அதிக வசூலித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்டு கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர். அதற்கு பள்ளி நிர்வாகம் நாங்கள் எங்களுக்கு வகுக்கப்பட்ட அளவில் தான் கட்டணம் வசூலிக்கிறோம். இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பள்ளியின் முன் 150-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் போராட்டத்தை கைவிட கோரினர். மேலும், திருவெறும்பூர் வருவாய் ஆய்வாளர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரினார்இதில் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் இரு தரப்பினரிடையே  திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

-ஆர்.சிராசுதீன்.